பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை 

Published: Thursday, November 13 2025, 12:44:02

4.பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் பேரவைக்கு கடந்த  6  மற்றும் 11 ஆகிய தேதிகளில்  இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது . இதுவரை மாநில வரலாற்றில் இல்லாத அளவில் 67 சதவீத  வாக்குகள் பதிவாகின . பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு பின் நடைபெற்றுள்ள இத்தேர்தலில்  பாஜக ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் , ராஷ்ட்ரிய  ஜனதா தளம்,  காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் இண்டி கூட்டணிக்கும் இடையே  கடும் போட்டி நிலவியது.  தேர்தலுக்குப் பிந்தைய கருத்துப்படி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத்  தக்க வைக்கும்  என்று தெரிகிறது . இந்நிலையில் இரு கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களிலும்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 


Next Story

Related News


Warning: Undefined array key "catid" in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php on line 470

Fatal error: Uncaught mysqli_sql_exception: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'AND NOT newsCat='11' AND NOT newsCat='12' AND NOT newsCat='14' ORDER BY newsI...' at line 1 in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php:472 Stack trace: #0 /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php(472): mysqli->query() #1 {main} thrown in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php on line 472